■ புதிய பிரதமரின் பெயர்.. இன்னும் சில நிமிடங்களில்..
4 புரட்டாசி 2024 புதன் 13:57 | பார்வைகள் : 2736
பொதுத்தேர்தல் இடம்பெற்று 60 நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இன்று புதன்கிழமை மாலை நாட்டின் புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் எலிசே மாளிகை சற்றுமுன்னர் வெளியிட்ட அறிக்கையில், இன்று நாள் முடிவில் புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமருக்கான போட்டியில் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிக்க பரிந்துரைத்த நிலையில், அனைவரையும் ஜனாதிபதி மக்ரோன் நிராகரித்துள்ளார்.
இந்நிலையில், இந்த பட்டியலில் Hauts-de-France மாகாண முதல்வர் Xavier Bertrand இனை பிரதமராக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இரண்டு மாதங்களாக நிலவி வந்த இந்த கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிடும் என தெரிவிக்கப்படுகிறது.