Paristamil Navigation Paristamil advert login

பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

5 புரட்டாசி 2024 வியாழன் 05:05 | பார்வைகள் : 501


மேற்குவங்க மாநிலம்  கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில்  பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த 8ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.  மருத்துவ மாணவி கொலைக்கு நீதி கேட்டு அங்கு  கொல்கத்தாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில்,  மருத்துவ மாணவி கொலைக்கு நீதி கேட்டு  நேற்று இரவிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மெழுகுவர்த்தி ஏந்தி நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் டார்ச் லைட்டை அணைத்து விட்டு முழக்கங்களை எழுப்பினர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்