Paristamil Navigation Paristamil advert login

சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

2 புரட்டாசி 2023 சனி 10:27 | பார்வைகள் : 4487



சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர்.

இதில் 70.4 % வாக்குகளைப்பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாக தேர்தல் துறை அறிவித்துள்ளது. இதையடுத்து தர்மன் சண்முகரத்னத்துக்கு அந்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மனுக்கு வாழ்த்துகள். உங்களுடைய தமிழ் பாரம்பரியமும், ஈர்க்கக்கூடிய தகுதிகளும் எங்களை பெருமையடைய செய்திருக்கிறது.
உங்களது வெற்றி சிங்கப்பூர் மக்களின் பன்முகத்தன்மையை காட்டுகிறது. உங்களது ஆட்சிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்