Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் அதிகாரிகளால்  போர்க் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள  ராணுவ வீரர்கள்

உக்ரைன் அதிகாரிகளால்  போர்க் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள  ராணுவ வீரர்கள்

12 ஆவணி 2024 திங்கள் 10:01 | பார்வைகள் : 1543


ரஷ்யாவுடன் இணைந்து போரிட்ட 5 இலங்கை முன்னாள் ராணுவ வீரர்கள் உக்ரைன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு போர்க் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.

இலங்கையர்கள் ரஷ்ய மற்றும் உக்ரைன் இராணுவங்களுடன் இணைந்து போரிடுவது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து, உக்ரேனுடன் அங்கீகாரம் பெற்ற துருக்கியிலுள்ள இலங்கை தூதரகம் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

ஐந்து இலங்கையர்கள் போர்க் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் உக்ரேனியப் படைகளுடன் போரிட்ட மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் சனிக்கிழமை இலங்கை தூதரகத்திற்குத் தெரிவித்தனர்.

அதேவேளை முன்னதாக, ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களை விடுவிப்பதற்காக இலங்கையில் இருந்து அமைச்சர்கள் குழு மொஸ்கோவிற்கு விஜயம் செய்தது.

பெரும்பாலும் ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர், ரஷ்ய குடியுரிமை, அதிக சம்பளம் மற்றும் சலுகைகளை வழங்குவதாக வாக்குறுதியளித்து ரஷ்யாவிற்கு பயணமாக ஏமாற்றப்பட்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

அதேவேளை கைதான இலங்கை இராணுவ வீரர்கள் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும், இதனால் அவர்களை விடுவிக்க கடினமாக உள்ளதுடன் , அவர்களில் சிலர் ரஷ்ய குடியுரிமை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்