இனி Password தேவை இல்லை; இது போதும் - google
24 புரட்டாசி 2024 செவ்வாய் 13:28 | பார்வைகள் : 871
கூகிள் நிறுவனம் கடவு சாவி திட்டத்தில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரைக்கும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஜிமெயில் கணக்கு வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆனால் ஜிமெயில் கணக்கு வைத்திருக்கும் பெரும்பாலானவர்களுக்கு ஒரு சிக்கல் உண்டு. என்ன கடவுச்சொல் (Password) வைத்திருந்தோம் என மறந்து விடுவார்கள்.
இந்த சிக்கலை போக்க கூகிள் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் கடவுச்சொல் இல்லாத எதிர்காலத்திற்கு நம்மை ஒரு படி மேலே கொண்டு செல்லும் என கூகிள் அறிவித்துள்ளது.
இந்த கடவு சாவி (Pass Key) திட்டம் மூலம் நீங்கள் கடவுச்சொல்லுக்கு பதிலாக கைரேகை, முகம், ஸ்கிரீன் லாக் போன்றவற்றை பயன்படுத்தி உள் நுழையலாம்.
தற்போது வரை இந்த பாஸ் கீயை ஆண்ட்ராய்டில் உள்ள Google கடவுச்சொல் நிர்வாகியில்(Password Manager) மட்டுமே சேமிக்க முடியும். இந்தக் கடவுச் சாவிகளை மற்ற சாதனங்களில் பயன்படுத்த முடியும் என்றாலும், கடவுச்சொல் இல்லாத உள்நுழைவை வழங்க பயனர்கள் உங்கள் Android சாதனத்தைப் பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.
தற்போது பீட்டாவில் சோதனைக்குக் கிடைக்கும் ChromeOS மூலம் Windows, macOS, Linux மற்றும் Android இலிருந்து Google கடவுச்சொல் நிர்வாகியில் கடவுசாவிகளை சேமிக்கலாம். அவை ஒரு முறை சேமிக்கப்பட்டதும், தானாகவே உங்கள் சாதனங்கள் முழுவதும் sync செய்யப்படும்.
புதிதாக கடவு சாவியை உருவாக்கவோ அல்லது ஏற்கனவே உருவாக்கிய கடவு சாவியை அணுகவோ கூகிள் கடவுச்சொல் நிர்வாகி பின் என்ற புதிய பாதுகாப்பு அம்சத்தையும் கூகிள் உருவாக்கியுள்ளது. புதிதாக ஒரு சாதனத்தில் கடவு சாவியை பயன்படுத்தும் போது கூகுள் கடவுச்சொல் நிர்வாகி பின் அல்லது ஆண்ட்ராய்டு போனின் ஸ்கிரீன் லாக் தெரிந்திருக்க வேண்டும்.
இந்த கடவுசாவியை ஏற்கனவே Google Amazon, PayPal மற்றும் WhatsApp போன்ற பிரபல தளங்களில் உருவாக்கலாம். தற்போது கடவுசாவியை பயன்படுத்த வேறு எந்த கூடுதல் செயலையும் தேவை இல்லாத வகையில் கூகிள் புதிய மேம்படுத்துதலை செய்துள்ளது.