தெற்கு லெபனானில் போர் பதற்றம் - இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கை!
1 ஐப்பசி 2024 செவ்வாய் 09:13 | பார்வைகள் : 1311
தெற்கு லெபனான் பகுதியில் போர் தாக்குதல் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், பொதுமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு நடைபெற்று வரும் போர் நடவடிக்கைக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு கொண்ட லெபனானின் ஹிஸ்புல்லா போராளி குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கினர்.
கடந்த 2 வாரங்களுக்கு மேலே இஸ்ரேலிய படைகளுக்கும், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையிலான வான்வழி மோதல்கள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில், இஸ்ரேலிய படைகள் தற்போது லெபனானுக்குள் தரைவழி தாக்குதல் நடத்த நுழைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேலிய படைகளுக்கும், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்களுக்கு இஸ்ரேலிய படைகள் எச்சரிக்கை செய்தி விடுத்துள்ளது.
தெற்கு லெபனான் பகுதியில் சண்டை தீவிரமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் யாரும் தங்கள் வாகனங்களை வடக்கு பகுதியில் இருந்து லிட்டானி ஆற்றின் தெற்கு பகுதிக்கு எடுத்து செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த எச்சரிக்கையானது அடுத்த அறிவிப்பு வரும் வரை அமுலில் இருக்கும் என்று இஸ்ரேலிய அதிகாரி அவிச்சாய் அட்ரே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறப்பட்டுள்ள செய்தியில், இஸ்ரேலிய படைகள் மீது தாக்குதல் நடத்த ஹிஸ்புல்லா அமைப்பினர் பொதுமக்களை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.