அனுஷ்காவுக்கு துபாய் தொழிலதிபருடன் திருமணமா?
1 ஐப்பசி 2024 செவ்வாய் 10:17 | பார்வைகள் : 736
பாகுபலி படத்தில் நடித்தபோது பிரபாஸ், அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதையடுத்து அவர்கள் இருவருமே நாங்கள் நண்பர்கள் மட்டுமே என்று சொல்லி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். அதையடுத்து அனுஷ்காவுக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து வருவதாகவும், அவரது ஜாதகத்தில் தோஷங்கள் இருப்பதால் பல கோயில்களுக்கு சென்று பரிகார பூஜைகள் நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக மூன்று ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா திருமணம் செட் ஆகாததால், மீண்டும் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலி ஷெட்டி' என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது 'காட்டி' மற்றும் ஜெயசூர்யா- பிரபுதேவா இணைந்து நடிக்கும் 'கத்தனார் தி வைல்ட் சோர்சரர்' என்று படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது 42 வயதாகும் அனுஷ்கா விரைவில் ஒரு துபாய் தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், டோலிவுட் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.