இலங்கையில் பேருந்து கட்டணங்கள் குறைப்பு!
1 ஐப்பசி 2024 செவ்வாய் 14:46 | பார்வைகள் : 566
எரிபொருள் விலை குறைப்பை தொடர்ந்து பேருந்து கட்டணங்களை குறைப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒக்டோபர் முதலாம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டண குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆரம்பக் கட்டணம் ஒரு ரூபாவினாலும் ஏனையக் கட்டணங்கள் 4.24 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த கட்டணக் குறைப்புக்கமைய இதுவரை 28 ரூபாவாக இருந்த ஆரம்ப கட்டணம் 27 ருபாவாக குறைக்கப்பட்டுள்ளதுடன், 36 ரூபாவாக இருந்த கட்டணம் 35 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 47 ரூபா முதல் 58 ரூபா வரையில் அறவிடப்பட்ட கட்டணம் 2 ரூபாவாலும், 69 ரூபா முதல் 80 ரூபா வரையிலான கட்டணம் 3 ரூபாவினாலும் 91 ரூபா முதல் 94 ரூபா வரையிலான கட்டணம் 4 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.