Paristamil Navigation Paristamil advert login

Philippine கொலை வழக்கு : பாராளுமன்றத்தில் அஞ்சலி!

Philippine கொலை வழக்கு : பாராளுமன்றத்தில் அஞ்சலி!

1 ஐப்பசி 2024 செவ்வாய் 15:24 | பார்வைகள் : 7014


கடந்த வாரம் 19 வயதுடைய Philippine எனும் பெண் கொலப்பட்டிருந்தார். அவரது மறைவுக்கு இன்று ஒக்டோபர் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேசிய பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயக என அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தினர். அதன் பின்னர் பாராளுமன்ற செயற்பாடுகள் ஆரம்பமாகின.

Bois de Boulogne பூங்காவில் கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி Philippine இன் சடலம் மீட்கப்பட்டிருந்தது. அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, படுகொலை செய்து பூங்காவில் புதைத்த 23 வயதுடைய மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த குற்றவாளி செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்