அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
1 ஐப்பசி 2024 செவ்வாய் 15:24 | பார்வைகள் : 1009
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (01) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபாய், விற்பனைப் பெறுமதி 301 ரூபாய் 5 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 388 ரூபாய் 87 சதம், விற்பனைப் பெறுமதி 404 ரூபாய் 37 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபாய் 93 சதம், விற்பனைப் பெறுமதி 336 ரூபாய் 75 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342 ரூபாய் 22 சதம், விற்பனைப் பெறுமதி 358 ரூபாய் 72 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபாய் 96 சதம், விற்பனைப் பெறுமதி 223 ரூபாய் 69 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபாய் 27 சதம், விற்பனைப் பெறுமதி 210 ரூபாய் 25 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 1 சதம் , விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 10 சதம்.