Bobigny - Noisy-le-Sec நகரங்களிடையே ட்ராம் சேவைகள் நிறுத்தம்..!!
1 ஐப்பசி 2024 செவ்வாய் 19:00 | பார்வைகள் : 3579
T1 ட்ராம் சேவைகள் Bobigny தொடக்கம் Noisy-le-Sec வரை சேவை நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் ஒக்டோபர் 29 ஆம் திகதி சனிக்கிழமை முதல் இந்த சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஒக்டோபர் 29 முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி வரையான ஆறுமாதங்களுக்கு இந்த சேவைகள் நிறுத்தப்படுவதாக RATP அறிவித்துள்ளது.
Montreuil தொடக்கம் Val-de-Fontenay வரை ட்ராம் சேவைகள் விஸ்தரிக்கப்பட உள்ளன. இந்த விஸ்தரிப்பு பணிகளுக்காக இந்த தடை ஏற்பட்டுள்ளது.