Paristamil Navigation Paristamil advert login

ரம்பா மகள் தமிழ் சினிமா ஹீரோயின் ஆவாரா?

ரம்பா மகள் தமிழ் சினிமா ஹீரோயின் ஆவாரா?

2 ஐப்பசி 2024 புதன் 14:14 | பார்வைகள் : 834


நடிகை ரம்பா தனது குடும்ப புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், அந்த புகைப்படத்தில் ரம்பாவின் தோளுக்கு மேல் வளர்ந்த அவரது மகளை பார்த்து, எதிர்கால தமிழ் சினிமா ஹீரோயின் ஆக இருக்குமா என்ற கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

தமிழ் திரையுலகில் கடந்த 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா. அவர் 2010ஆம் ஆண்டில் கனடா நாட்டின் தொழில் அதிபர் இந்திரகுமார் பத்மகுமாரை திருமணம் செய்து கொண்டு, கிட்டத்தட்ட திரை உலகத்தில் இருந்து விலகினார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்; இதில் மூத்த மகள் தற்போது நன்றாக வளர்ந்து, பெரிய பெண்ணாகி விட்டார்.

இந்த நிலையில், ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலங்கைக்கு சென்ற போது எடுத்த குடும்ப புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், ரம்பாவை விட அதிகமாக வளர்ந்துள்ள அவரது மகள் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் "தமிழ் சினிமா ஹீரோயின் ஆக வருவாரா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். ரம்பாவின் மகள் நடிகையாக அறிமுகமாவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்