Paristamil Navigation Paristamil advert login

ஹமாஸ் தாக்குதலைக் கண்டித்து பரிசில் ஆர்ப்பாட்டம்..!

ஹமாஸ் தாக்குதலைக் கண்டித்து பரிசில் ஆர்ப்பாட்டம்..!

6 ஐப்பசி 2024 ஞாயிறு 20:11 | பார்வைகள் : 2690


ஒக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் ஆயுதக்குழு மேற்கொண்ட தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் இடம்பெற்று நாளையுடன் ஒரு வருடம் பூர்த்தியாகிறது.

இந்த தாக்குதலைக் கண்டித்து இன்று ஒக்டோபர் 6, ஞாயிற்றுக்கிழமை பரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இஸ்ரேலுக்கு ஆதரவானவர்கள் பலர் Place de Fontenoy பகுதியில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஒன்று கூடி தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். 

பாடகர்கள், சமூக அமைப்பாளர்கள், யூத அமைப்புக்களின் ஒருங்கிணைப்பாளர்கள் என பலர் இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று முன் நடத்தினர். பல ஆயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்