ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ சந்தீப் கிஷான்?
9 புரட்டாசி 2024 திங்கள் 09:34 | பார்வைகள் : 1102
தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்து அறிவிப்பு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் வெளியான நிலையில் இன்னும் இந்த படத்தின் ஹீரோ யார் என்பது முடிவு செய்யவில்லை என்று கூறப்பட்டது.
சிவகார்த்திகேயன், கவின், விஜய் சேதுபதி உட்பட பல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ஹீரோவாக சந்தீப் கிஷான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’மாநகரம்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள சந்தீப் கிஷான், சமீபத்தில் வெளியான தனுஷின் ’ராயன்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக சந்தீப் கிஷான் இருப்பதால் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த படம் உருவாக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.