இந்தியை திணித்தது யார் ? ராகுலுக்கு அண்ணாமலை கேள்வி
9 புரட்டாசி 2024 திங்கள் 16:47 | பார்வைகள் : 854
இந்தியை திணித்தது யார் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேச்சுக்கு பதிலடி கேள்வி எழுப்பியுள்ளார் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை.
இதுதொடர்பாக அவர் ‛எக்ஸ்'' வலைதளத்தில் பதிவேற்றியுள்ளதாவது,
2020ல் கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கை தான் முதன்முறையாக தாய்மொழியில் கற்பதை வலியுறுத்துகிறது.
இந்திய குடிமக்கள் மீது இந்தியை திணித்தது யார் ? பிரதமர் மோடியா ? காங்கிரசா ? இந்தி திணிப்பு போன்ற இல்லாத விஷயங்களை ராகுல் பேசியுள்ளார். ராகுலின் பாட்டி இந்திரா காலத்திலிருந்து தேசிய கல்வி கொள்கையில் இந்தி கட்டாயம் என இருந்துள்ளது. தமிழன் பெருமையை உலகம் முழுதும் எடுத்துச்சென்றார் பிரதமர் மோடி. ஆனால் அன்னிய மண்ணிலிருந்து தமிழ்நாட்டை இழிவுபடுத்தியுள்ளார் ராகுல்.
பிரதமர் மோடி தங்கள் தாய்மொழிக்காக என்ன செய்தார் என்று பலர் கேள்வி கேட்கலாம். பிரதமர் மோடி நமது தாய்மொழியான தமிழுக்கு என்ன செய்தார் என்பதை வெளிப்படுத்துகிறேன்.
74 வது ஐநா பொதுச் சபையில் முதன்முறையாக பிரதமர் மோடி தமிழில் பேசினார் . அப்போது அவர்'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று கூறினார், இது உலகம் ஒன்று என்பதை குறிக்கிறது.
மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவாக, அவரது பிறந்த நாளான டிசம்பர் 11ஆம் தேதி தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கப்பட்டது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அறிமுகப்படுத்தப்பட்டது.