கடுமையான இயற்கை சீற்றங்களை எதிர்நோக்கும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை
10 புரட்டாசி 2024 செவ்வாய் 08:33 | பார்வைகள் : 1770
நார்வே விஞ்ஞானிகள் சிலர் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பேர்கள், அதாவது சுமார் 5.6 பில்லியன் மக்கள் கடுமையான இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வார்கள் என்று மதிப்பிடுகின்றனர்.
ஸ்பெயின், இத்தாலி, மொராக்கோ, பெரு, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் பேய் மழை மற்றும் கடுமையான வெப்ப அலைகளை அதிகமாக எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக கணித்துள்ளனர்.
குறிப்பாக உலகெங்கிலும் உள்ள 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தாங்க முடியாத வெப்பம், திடீர் வெள்ளம் உட்பட பல்வேறு இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுவார்கள் என்றும் கணித்துள்ளனர்.
மத்திய தரைக்கடல், வடமேற்கு மற்றும் தெற்கு அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா போன்ற பகுதிகள் அடுத்த பத்தாண்டுகளில் அல்லது அதற்கு பின்னர் மிக மோசமான காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் பிரித்தானியா, வடக்கு ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுடன் சேர்ந்து, விரைவான வெப்பநிலை மாற்றங்கள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என்றும், ஆனால் மழைப்பொழிவின் அளவு கடுமையாக உயரும் என்றும் கணித்துள்ளனர்.