கனேடியர்களிடையே அதிகரித்து வரும் இருமல் நோய்
12 புரட்டாசி 2024 வியாழன் 10:32 | பார்வைகள் : 1297
கனடா முழுவதும் தொடர் இருமல் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நியூபவுண்ட்லான்ட் லப்ராடர் மாகாணத்திலும் நோயாளரை எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக மாகாண பிரதம மருத்துவர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாகாண பிரதம மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெனிஸ் கிட்ஸ் கர்லின் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதுவரையில் மாகாணத்தில் சுமார் 230 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நோய் தடுக்கக்கூடியது என அவர் தெரிவிக்கின்றார்.
கடந்த மாதம் கியுபெக் மாகாணத்தில் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட 11000 பேர் பதிவாகி இருந்தனர்.
ஒன்றாரியோ மாகாணத்திலும் நோயாளர்கள் பதிவாகி இருந்தனர்.
நியூ பிரவுன்ஸ்விக் மாகாணத்திலும் இந்த தொடர் இருமல் நோயாளிகள் அதிக அளவில் பதிவாகி உள்ளனர்.
தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதன் மூலம் இந்த நோய் பரவுவதனை தடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அதிகளவில் சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவிலும் இந்த நோய் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர் இருமல் நோய் பரவுகை தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக நியூ ஃபவுண்ட்லைன் மற்றும் லெப்ட்ராடர் மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.