நாமலின் பிரசார கூட்டத்தின் மீது கல் வீச்சு
12 புரட்டாசி 2024 வியாழன் 12:10 | பார்வைகள் : 1014
ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச பங்கேற்கவிருந்த பிரசார கூட்டத்தின் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை சிறிபோபுர பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த கல் வீச்சு தாக்குதல்களில் சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சிறுவன் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கூட்ட அரங்கின் மீது சுமார் மூன்று கற்கள் வீசப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பிரசார கூட்டத்தில் நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, ஷிராந்தி ராஜபக்ச ஆகியோர் பங்கேற்கவிருந்தனர்.
கல் வீச்சுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.