ஜப்பானில் வெளியாகும் அட்லி - நயன்தாரா படம்..
12 புரட்டாசி 2024 வியாழன் 14:10 | பார்வைகள் : 956
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த ’ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படம் ஜப்பானில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்லி இயக்கிய முதல் பாலிவுட் திரைப்படமான ’ஜவான்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் உலகம் முழுவதும் இந்த படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் ’ஜவான்’ திரைப்படம் தற்போது ஜப்பான் நாட்டில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அட்லி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ’ஜப்பான் ரசிகர்கள் ரெடியா? நவம்பர் 29ஆம் தேதி ஜப்பான் திரையரங்குகளில் ’ஜவான்’ வெளியாக போகிறது’ என்று அறிவித்துள்ளார். மேலும் ஜப்பான் மொழி போஸ்டரையும் அவர் பகிர்ந்துள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே ’ஜவான்’ திரைப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் ஜப்பானில் இன்னும் எத்தனை கோடி வசூலாக போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.