Montparnasse மயானத்தில் விழுந்த இடி! - தீப்பிடித்த மரம்!

12 புரட்டாசி 2024 வியாழன் 19:45 | பார்வைகள் : 8581
Montparnasse மயானத்தில் உள்ள மரம் ஒன்றில் மின்னல் தாக்கி, மரம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த காட்சி புகைப்படமாக எடுக்கப்பட்டு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள குறித்த Montparnasse மயானத்தில் நேற்று செப்டம்பர் 12 ஆம் திகதி மாலை இந்த இடி மின்னல் தாக்குதல் இடம்பெற்றது.
நேற்றைய தினம் பரிசில் பல இடங்களில் ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்திருந்தது. 12°C வரை வெப்பம் குறைவடைந்திருந்தது.