Paristamil Navigation Paristamil advert login

நாய்கள் வெருக்கும் கோடை வெயில்

நாய்கள் வெருக்கும் கோடை வெயில்

27 ஐப்பசி 2024 ஞாயிறு 13:45 | பார்வைகள் : 1433


கோடை காலத்தின்!
வெப்ப பிரளயத்தை ஜீரனிக்க!
முடியாத நாய்கள்,!
கிணற்றடி மணலின் ஈரத்தைத்தேடி!
உறங்கி உடலை குளிரூட்டி!
ஆறுதலாகும் போது,!
வீட்டுக் குழந்தைகள் குறுக்கிற்று!
தன் இளைப்பாறுகையை முறியடித்து!
ஆத்திரத்தை ஊட்டும் தருணத்தில்!
நாய்கள் முறைத்துப் பாயும்!
குரைப்பு கடினமானதுதான்.!
இருப்பினும்!
நாய்கள் வெருக்கும் கோடை வெயிலின்!
அகோர சூட்டை பொருக்க முடியாமல்!
இப்படித்தான் வளர்த்தவன் வீட்டு!
எச்சச் சோற்றுக்குக்கூட நன்றி!
செலுத்தாதபடி நடந்து விடுகிறது!
நாய்கள்.!