வெண்ணெய் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடியுமா..?
28 ஐப்பசி 2024 திங்கள் 13:50 | பார்வைகள் : 485
வெண்ணெய் என்பது பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு சுவையான பால் பொருள் ஆகும். தினமும் வெண்ணெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல. வெண்ணெய் கால்சியம் நிறைந்தது, அதனால் தான் பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. தற்போது மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் உடல் எடை அதிகரிப்பு என்பது சகஜமாகிவிட்டது. இதனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் என பல நோய்களுக்கு ஆளாகின்றனர். உடல் பருமனால், பெரும்பாலானோர் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.
பொதுவாக எடையை குறைக்க வேண்டும் என்றால் உணவில் கொழுப்புகளை சேர்க்கக் கூடாது என்பார்கள். ஆனால் உண்மையில் உடல் எடையை குறைக்க நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை உணவில் சேர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வெண்ணெய்யில் டிரான்ஸ் கொழுப்புகள் போன்ற கெட்ட கொழுப்புகள் இல்லை. இது பாலில் இருந்து பிரிக்கப்படுவதால் வைட்டமின்கள் ஏ, ஈ, ஆன்டி ஆக்ஸிடன்கள், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. மேலும், உடல் பருமன் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. ஒரு ஸ்பூன் பட்டரில் 102 கலோரிகள், 11.5 கிராம் கொழுப்பு, 7.2 கிராம் நிறைவுற்ற கொழுப்பு, 30 mg கொழுப்பு, 2 mg சோடியம் மற்றும் 97 mcg வைட்டமின் ஏ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
எடை குறைப்புக்கு வெண்ணெய் உதவுமா? கொழுப்புள்ள உணவுகளை தவிர்ப்பது தான் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஒரே வழி என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர். ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, அதிக கொழுப்புள்ள பால் பொருட்களில் எடை அதிகரிப்பதற்கான சான்றுகள் இல்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான டயட்-டில் வெண்ணெயை சேர்த்துக் கொள்வதற்கான வழிகள் : நீங்கள் சாப்பிடும் உணவுகளில் ஊட்டச்சத்து குறைவாக இருந்தால், உங்கள் உணவுகளில் வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். வறுத்த காய்கறிகளில் ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
யுஎஸ்டிஏ உணவுமுறை வழிகாட்டுதல்களின்படி, வெண்ணெயை மொத்த கலோரிகளில் சுமார் 10 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக அல்லது ஒரு நாளைக்கு சுமார் 200 கலோரிகள் என்ற அளவில் உங்கள் உணவில் தினமும் சேர்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
எடை குறைப்புக்கு உப்பு மற்றும் உப்பு சேர்க்காத வெண்ணெய் : பெரும்பாலான மக்கள் உப்பு வெண்ணெயை தேர்வு செய்கிறார்கள், ஏனெனில் அது சுவையாக இருக்கும் என்பதால் தான். ஆனால் எடை குறைப்புக்கு உப்பு சேர்க்காத வெண்ணெய் சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உப்பு சேர்த்த வெண்ணெயை சாப்பிடுவதால், உடலில் அதிக கொழுப்பு உண்டாக்குகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.