Paristamil Navigation Paristamil advert login

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

30 ஐப்பசி 2024 புதன் 15:42 | பார்வைகள் : 1109


மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது புதன்கிழமை (30) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத  சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுல் அத்துமீறி நுழைந்தமை மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர் இரண்டு சரீர பிணையில் குறித்த வைத்தியர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவின்  வழக்கு விசாரணைகள் புதன்கிழமை (30) மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் அவர் மன்றில் முன்னிலையாக வில்லை. மேலும் இரண்டு பிணைதாரர் களில் ஒருவர் மாத்திரமே மன்றில் முன்னிலையாகி இருந்தார்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் வைத்தியர் அர்ச்சுனா மற்றும் பினையாளி ஆகிய இருவரையும் கைது செய்து மன்றில் முன்னிலை யாக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்