தோனி விளையாடுவது உறுதி! இலங்கையின் பத்திரனாவுக்கு 13 கோடி..CSK அதிரடி
1 கார்த்திகை 2024 வெள்ளி 10:25 | பார்வைகள் : 937
2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவதை CSK அணி உறுதி செய்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அடுத்த சீசன் 2025யில் நடக்க உள்ளது. இந்த சீசனில் ஏலத்திற்கான தக்கவைப்பு விதிமுறைகளின்படி ஒரு அணி 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்.
இந்த ஏலத்தில் அணிகளின் பயன்பாட்டு தொகை 120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்பித்துள்ளது.
அதன்படி எம்.எஸ்.தோனியை (M.S.Dhoni) ரூ.4 கோடிக்கு CSK அணி தக்கவைத்துள்ளது. அதேபோல் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா 13 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார்.
மேலும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜடேஜா இருவரும் ரூ.18 கோடிக்கும், ஷிவம் தூபே ரூ.12 கோடிக்கும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.