பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்து : இரு மாணவிகள் உயிரிழப்பு
1 கார்த்திகை 2024 வெள்ளி 11:09 | பார்வைகள் : 1015
பதுளை - துன்ஹிந்த 4 ஆவது மைல்கல் பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இரு மாணவிகள் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பு - கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்தில் 40 பேர் பயணித்துள்ளனர்.
விபத்து சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.