Paristamil Navigation Paristamil advert login

செர்பியா நாட்டின் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கோர சம்பவம்! 14 பேர் பலி

செர்பியா நாட்டின் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கோர சம்பவம்! 14 பேர் பலி

2 கார்த்திகை 2024 சனி 03:56 | பார்வைகள் : 1405


செர்பியா நாட்டின் நோவி சட் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் 14 பேர் இதுவரையில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செர்பியா நாட்டின் நோவி சட் நகரில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில் நிலையத்தில் வழக்கம்போல பயணிகள் ரெயிலுக்கு காந்திருந்தனர்.

இதன்போது திடீரென ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். 

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த 4 பேரை மீட்டனர் ஆனாலும், இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்