கனடாவிற்குள் ஆமைகளை கடத்த முயன்ற பெண்
14 ஐப்பசி 2024 திங்கள் 09:17 | பார்வைகள் : 451
கனடாவிற்குள் ஆமைகளை கடத்த முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
41 வயதான வேன் யீ நக் என்ற சீன பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 29 ஆமைகளை இந்த பெண் கடத்த முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
படகுமூலம் அமெரிக்க எல்லைப் பகுதியில் இருந்து கனடாவிற்குள் இந்தப் பெண் ஆமைகளை கடத்திச் செல்ல முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பெண்ணுக்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் 250,000 டொலர் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவில் இந்த வகை ஆமைகளுக்கு நல்ல கிராக்கி உண்டு எனத் தெரிவிக்கப்படுகின்றது.