Paristamil Navigation Paristamil advert login

தீபாவளி முறுக்கு

தீபாவளி  முறுக்கு

23 ஐப்பசி 2024 புதன் 15:30 | பார்வைகள் : 780


தீபாவளி நெருங்குகிறது என்பதை முதலில் உணர்த்துவதே தின்பண்டங்கள்தான். ஆம்.. தீபாவளி வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தீபாவளி பண்டங்களை செய்ய ஆரம்பித்துவிடுவோம். பின் தீபாவளியன்று படையலிட்டு பகிர்ந்து உண்போம். அந்த வகையில் தீபாவளி பண்டங்களில் இடம் பெறும் முறுக்கு எப்படி சுலபமான முறையில் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்

முறுக்கு அரிசி மாவு - 1 கப்
உளுந்தம் பருப்பு - 3 டீ ஸ்பூன் அளவு
வெள்ளை எள் - 1 டீ ஸ்பூன் அளவு
நெய் - 2 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - ¼ டீ ஸ்பூன்
பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - ½ லிட்டர்
உப்பு - தேவையன அளவு

செய்முறை

முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, இளம் சூட்டில் சூடேற்றவும். இதில் உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்கவும். இதை ஆறிய பின்னர் அரைத்து வைத்துக் கொள்ளவும். இப்போது உளுந்து மாவு, மிளகாய் பொடி, பெருங்காயம், சீரகம், அரிசி மாவு, நெய் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

இப்போது கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசையவும். மாவு பிசுபிசுப்பாக இருக்க வேண்டும். பிசைந்த மாவை அப்படியே உருண்டை பிடித்து எடுக்கவும். அந்த உருண்டைகளை முறுக்கு அச்சு உள்ளே வைத்து, பிழிவதன் மூலமாக பச்சை மாவு அச்சுகளை பெறவும்.

பிறகு கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்றாக சூடேறியதும் அதில், இந்த முறுக்கு அச்சுகளை ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும். முறுக்கு நல்ல பொன்னிறமாக மாறும் வரை வேக விடவும். அவ்வப்போது திருப்பி விட்டு, நன்றாக வேக வைக்கவும்.
இறுதியாக முறுக்கை எடுத்து ஆற வைத்து, காற்று புகாத கண்ணாடி ஜாரில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளவும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்