புதிய பிரதமர் இன்று அறிவிக்கப்படுகிறார்! - Michel Barnier சந்திப்புக்கள் இரத்து!!
5 மார்கழி 2024 வியாழன் 17:44 | பார்வைகள் : 4803
நாட்டின் புதிய பிரதமர் இன்று டிசம்பர் 5, வியாழக்கிழமை இரவு அறிவிக்கப்படுகிறார். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகின்றார். இந்த உரையின் பின்னர் புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்று காலை பிரதமர் Michel Barnier தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்ததாகவும், அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய பிரதமர் இடதுசாரி கட்சியில் இருந்து நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதேவேளை, வலதுசாரி பிரதமர் நியமிக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.
அத்தோடு, Barnier இன் பதவிவிலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவருக்கான அனைத்து அரச பயணங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நாளை வெள்ளிக்கிழமை ரோம் நகருக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்த பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.