Paristamil Navigation Paristamil advert login

என்னுயிர் தோழி

என்னுயிர் தோழி

6 மார்கழி 2024 வெள்ளி 10:22 | பார்வைகள் : 635


கல்லூரி காலத்தில் அறிமுகம்
பத்தோடு பதினொன்றாக..
பழகிய சில நாட்களிலேயே
நின்றாய் மனதிற்கு நெருக்கமாக!!

மூன்றாண்டு கல்லூரி வாழ்வில்
உன்னை சந்திக்காத
நாட்கள் சிறிது
உன்னைப்பற்றி சிந்திக்காமல்
இருந்தது அரிது
விடுமுறையிலும் சந்திப்போம்!
விடாமல் பேசுவோம்!!

அதீத பாசம்
அளவான கண்டிப்பு
உரிமையுடன் சண்டை
ஒப்பனையில்லா பேச்சு
விட்டுக்கொடுக்காத நட்பு..

திக்கெட்டாத தூரத்தில் இருந்தாலும்
என் இக்கட்டான நேரத்தில்
உன் அலைபேசி வார்த்தைகளே
எனக்கு ஆக்ஸிஜன்!!

கால ஓட்டத்தில் காணாமல் போன
நட்புறவுகளுக்கு மத்தியில்
மாறாமல் நீ..
மறவாமல் நீ..

உன்னுடனான
பயணங்கள் தொடர்கிறது
அன்று பேருந்தில்..
இன்று
அரிதான சந்திப்புகளிலும்
அலைபேசி உரையாடல்களிலும்!!

தோழியா சகோதரியா
யாவும் நீயே
நீயும் என் தாயே!