Paristamil Navigation Paristamil advert login

உலகிலேயே அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்கும் முதல் 10 நாடுகள் எவை தெரியுமா?

உலகிலேயே அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்கும் முதல் 10 நாடுகள் எவை தெரியுமா?

10 மார்கழி 2024 செவ்வாய் 08:05 | பார்வைகள் : 725


அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்கும் உலகின் முதல் 10 நாடுகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தற்போதைய காலத்தில் தகவல் தொழில்நுட்பம் அனைத்து தரப்பினருக்கும் மிகப்பெரிய தேவையாகவே மாறிவிட்டது.

அந்தவகையில், பயனர்களுக்கு அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் குடிமக்கள் மற்றும் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப இன்டர்நெட் சேவையின் வேகம் (Fastest Internet) மாறுபடுகிறது.

1. அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்கும் பட்டியலில் முதல் இடத்தில் ஐக்கிய அரபு அமீரக நாடு உள்ளது. இந்த நாட்டில் இணைய வேகம் வினாடிக்கு 292 மெகா பைட் (291.85 Mbps) ஆக உள்ளது.

2. இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. இங்கு இணைய வேகம் 291 Mbps ஆக உள்ளது.

3. மூன்றாவது இடத்தில் உள்ள ஹாங்காங்கில் இன்டர்நெட் வேகம் 277.26 Mbps ஆக உள்ளது.

4. நான்காவது இடத்தில் உள்ள தென் அமெரிக்கா நாடான சிலி உள்ளது. இங்கு இணைய வேகம் 263.89 Mbps ஆக உள்ளது.

5. ஐந்தாவது இடத்தில் உள்ள அமெரிக்காவில் இணைய வேகம் 243.1 Mbps ஆக உள்ளது.

6. ஆறாவது இடத்தில் உள்ள தாய்லாந்தில் இணைய வேகம் 231.86 Mbps ஆக உள்ளது.

7. ஏழாவது இடத்தில் உள்ள ஐஸ்லாந்தின் இணைய வேகம் 226.28 Mbps ஆக உள்ளது.

8. எட்டாவது இடத்தில் உள்ள பிரான்ஸ் நாட்டின் இணைய வேகம் 226.21 Mbps ஆக உள்ளது.

9. ஒன்பதாவது இடத்தில் உள்ள டென்மார்க்கின் இணைய வேகம் 219.44 Mbps ஆக உள்ளது.

10. பத்தாவது இடத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் இணைய வேகம் 207.90 Mbps ஆக உள்ளது.   

எழுத்துரு விளம்பரங்கள்