Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சீரற்ற காலநிலை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

இலங்கையில் சீரற்ற காலநிலை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

29 கார்த்திகை 2024 வெள்ளி 15:42 | பார்வைகள் : 796


இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், காணாமல் போன ஒருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக 138, 191 குடும்பங்களைச் சேர்ந்த 463, 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 31, 080 பேர் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், 101 வீடுகள் முழுமையாகவும், 2, 567 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்