அமெரிக்கா-பரிஸ் : விமானத்தில் இரகசியமாக மறைந்து வந்த பெண்!!
29 கார்த்திகை 2024 வெள்ளி 17:23 | பார்வைகள் : 2769
அமெரிக்காவின் நியூ யோர்க் நகரில் இருந்து பரிசுக்கு வந்த விமானம் ஒன்றில் பெண் ஒருவர் ரகசியமாக மறைந்து வருகை தந்துள்ளார்.
நவம்பர் 27, புதன்கிழமை பரிசை Delta நிறுவனத்தின் DL264
விமானம் வந்தடைந்தது. விமானம் புறப்பட்டு ஆறு மணிநேரம் கழித்து குறித்த பெண் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிய முடிகிறது. பின்னர் விமானம் சாள் து கோல் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதும் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
அவரிடம் அடையாள அட்டையோ அல்லது ’போடிங்’ சிட்டையோ இருக்கவில்லை என தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குறித்த விமான சேவை நிறுவனம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.