Paristamil Navigation Paristamil advert login

டொனால்ட் டிரம்ப்பின் முயற்சி தோல்வி

டொனால்ட் டிரம்ப்பின் முயற்சி தோல்வி

8 தை 2025 புதன் 12:25 | பார்வைகள் : 2136


அமெரிக்காவில் (us) 2016 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்திவைக்கும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் (Donald trump) முயற்சி தோல்வியடைந்தது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து குடியரசுக் கட்சி சாா்பில் டிரம்ப் போட்டியிட்டாா்.

அப்போது, தனக்கும் ஆபாசப் பட நடிகை ஸ்டாா்மி டேனியல்ஸ் என்பவருக்கும் இடையே இருந்த தொடா்பு குறித்து வெளியே சொல்லாமல் இருப்பதற்காக அந்த நடிகைக்கு 1.3 லட்சம் டொலா் டிரம்ப் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவனத்தின் கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாகவும் தோ்தல் முடிவுகளில் தவறான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஆதரவாளா்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பிரசார நிதியை டிரம்ப் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த விவகாரத்தில் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளையும் நியூயோக் நகரிலுள்ள மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் உறுதி செய்தது.

குற்றவியல் வழக்கில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஒருவா் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யட்டது அதுவே முதல்முறை.

கடந்த நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தோ்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள சூழலில், இந்த வழக்கில் டிரம்ப்புக்கான தண்டனை வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுவதாக உள்ளது.

எனினும், அதனை எதிர்த்து டிரம்ப் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பரிசீலித்த மேன்ஹாட்டன் நீதிபதி ஜுவான் எம். மொ்சன், மனுவைத் தள்ளுபடி செய்தால் அதையடுத்து, வழக்கில் டிரம்ப்புக்கான தண்டனை அறிவிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

எனினும், இதற்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் டிரம்ப் மனு தாக்கல் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது


 



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்