Paristamil Navigation Paristamil advert login

அஜித்தின் அடுத்த படம் கால தாமதம் ஆகுமா?

அஜித்தின் அடுத்த படம் கால தாமதம் ஆகுமா?

10 தை 2025 வெள்ளி 14:16 | பார்வைகள் : 744


அஜித் தற்போது ’விடாமுயற்சி’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில், அவருடைய அடுத்த படம் சில மாதங்கள் காலதாமதம் ஆகும் என்ற தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான ’விடாமுயற்சி’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில், இம்மாத இறுதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைப்போல், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது தொழில்நுட்ப பணிகள் தொடங்கிவிட்டது. மேலும், இந்த படம் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த இரண்டு படங்களை தவிர, அஜித்தின் அடுத்த படம் உருவாக காலதாமதம் ஆகும் என தெரிகிறது. அஜித் இன்னும் சில மாதங்களுக்கு ரேஸ் போட்டிகளில் மட்டும் முழுமையாக கவனம் செலுத்த இருப்பதாகவும், அவருடைய அடுத்த படமான ’ஏகே 64’ திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபரில் தான் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

எனவே, 2026 ஆம் ஆண்டில் தான் அவருடைய அடுத்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் கார் ரேஸ் போட்டியில் புதிய சாதனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்