Paristamil Navigation Paristamil advert login

ரோகித் சர்மாவின் அதிரடி முடிவால் பயிற்சியாளர் அதிருப்தி

ரோகித் சர்மாவின் அதிரடி முடிவால் பயிற்சியாளர் அதிருப்தி

14 தை 2025 செவ்வாய் 09:13 | பார்வைகள் : 902


இந்திய கிரிக்கெட் அணியின்(india cricket ) தலைவர் ரோகித் சர்மா(rohit sharma) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் தனது முடிவை திடீரென விலக்கி கொண்டது அந்த அணியின் பயிற்சியாளர் கம்பீருக்கு(Gautam Gambhir) பிடிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா(india) அவுஸ்திரேலிய(australia) டெஸ்டின் ஐந்தாவது போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகியது அவரது ஓய்வுக்கான முன்னறிவிப்பு என பலர் கருதினர். முதல் மூன்று போட்டிகளில் ரோகித் ஆட்ட திறனில் இல்லாததும் கடைசி போட்டியில் இருந்து விலகியதும் பேசுபொருளானது.

இருப்பினும் சிட்னியில் நடந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், ரோகித் ஒரு பேட்டியை அளித்தார். அதில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என்று தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, இந்திய அணி ஓய்வு அறையில் என்ன நடந்தது என்பது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் கசிந்துள்ளன.

அதில், ரோகித் சர்மா டெஸ்டுக்குப் பிறகு விலக முடிவு செய்தார் என்றும் ஆனால் அவருக்கு நெருக்கமான நலன் விரும்பிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

ரோகித் சர்மாவை அவர்கள் வற்புறுத்தி தடுக்கவில்லை என்றால் அப்போதே அவர் ஓய்வை அறிவித்திருப்பார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ரோகித் ஓய்வு அறிவுக்கும் முடிவில் இருந்து யு டர்ன் அடித்தது இந்திய அணி பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு பிடிக்கவில்லை என்றும், ரோகித் ஓய்வு பெறுவதையே கம்பீர் விரும்பினார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இது குறித்து கிரிக்கெட் வட்டாரங்கள் தற்போது கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளன.   

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்