Paristamil Navigation Paristamil advert login

ரசிகர்களுக்கு நன்றி சொன்ன அஜித்..!

ரசிகர்களுக்கு நன்றி சொன்ன அஜித்..!

14 தை 2025 செவ்வாய் 13:54 | பார்வைகள் : 1007


கடந்த 2 நாட்களுக்கு முன் துபாயில் நடந்த கார் ரேஸ் போட்டியில் அஜித்தின் அணி 3வது இடத்தை பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது. இதனையடுத்து அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் அஜித்துக்கும் அவரது அணியினர்களுக்கும் வாழ்த்துக்களை குவித்து வரும் நிலையில் அனைவருக்கும் தனது நன்றியை கூறி அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது

துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.

இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார்ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்