தடையின்றி பயணம்... பயன்பாட்டுக்கு வருகிறது 'France Identité' செயலி!!

22 தை 2025 புதன் 07:00 | பார்வைகள் : 2869
தொடருந்தில் மேற்கொள்ளும் பயணங்களை மேலும் எளிதாக்கும் நோக்கில் "France Identité" செயலியூடாக பயணச்சிட்டைகளை SNCF சோதனையிட்டு வருகிறது.
இந்த செயலியில் உங்களது பயண அட்டையை பதிவேற்றுவதன் மூலம், அதனை தொலைத்தாலோ, அல்லது மறந்துவிட்டு வந்தாலோ ஏற்படும் சிக்கல்களில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். பயணச்சிட்டை பரிசோதகர்களிடம் உங்களது அடையாள அட்டைகளை காண்பிக்கும் France Identité செயலியூடாக, பயணச்சிட்டைகளுக்கான பதிவுகளையும் காண்பிக்க முடியும்.
நேற்று முன்தினம் ஜனவரி 20 ஆம் திகதி திங்கட்கிழமையில் இருந்து இந்த செயலி மூலம் பயணிகளது ஆவணங்களையும், பயணச்சிட்டைகளையும் சோதனையிட்டு வருகிறது. TGV Inoui தொடருந்தில் நேற்றைய தினம் பல்வேறு பயணிகளது பயணச்சிட்டைகள் அதன் வழியாக சோதனையிடப்பட்டதோடு, பயணிகளுக்கு இந்த இலகு வழி அறிமுகமும் செய்துவைக்கப்பட்டது.
இந்த செயலியில் உள்ள பிரத்தேகமான QR code ஒன்றினை, கட்டுப்பாட்டாளர்கள் தங்களது தொலைபேசியூடாக ஸ்கேன் செய்து, விபரங்களை அறிந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.