Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறிய புகலிடக் கோரிக்கையாளர்கள்

சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறிய புகலிடக் கோரிக்கையாளர்கள்

25 தை 2025 சனி 14:55 | பார்வைகள் : 1673


ஐரோப்பிய நாடுகளில் அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றது.

இந்நிலையில் சுவிட்சர்லாந்திலிருந்து 2024 ஆம் ஆண்டில் மட்டும், 13,264 புகலிடக்கோரிக்கையாளர்கள் வெளியேறியுள்ளார்கள்.

2023ஆம் ஆண்டில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 6,077.

2024ஆம் ஆண்டிலோ அந்த எண்ணிக்கை 18.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.


அதாவது, 7,205பேர் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறியுள்ளார்கள்.

அவர்களில் 2,467 பேர் தாமாகவே சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். 4,738 பேர் அரசால் வெளியேற்றப்பட்டவர்கள் என புலம்பெயர்தலுக்கான மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது.


இதுபோக, சுவிட்சர்லாந்தில் சிறப்பு அகதிகள் நிலை கொடுக்கப்பட்ட உக்ரைன் நாட்டவர்களில் 6,059 பேர் தாமாகவே தங்கள் நாட்டுக்குத் திரும்பியுள்ளார்கள்.

ஆக, மொத்தம் 13,264 புகலிடக்கோரிக்கையாளர்கள் 2024ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறியுள்ளார்கள்.  



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்