போதைப்பொருள் நுகர்வில் பிரான்ஸ் முதலிடம். Bruno Retailleau

8 மாசி 2025 சனி 07:43 | பார்வைகள் : 5507
மரணத்தை மட்டுமே கடைசியில் தரக்கூடிய போதைவஸ்து பாவனையில் பிரான்ஸ் திடீரென 2023-ம் ஆண்டில் இருந்து வேகமாக வளர்ந்து இன்று ஐரோப்பிய நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரெஞ்சு மக்கள் 2023 இல் ஒருமுறையாவது அவற்றை எடுத்துள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
850,000 பிரெஞ்சு மக்கள் ஒவ்வொரு நாளும் கஞ்சா புகைக்கிறார்கள் அத்துடன் ஐந்து மில்லியன் மக்கள் ஆண்டில் இருமுறையேனும் தாங்கள் போதைவஸ்து பாவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பெரும்பாலான மக்கள் கொண்டாட்டங்கள் ஒன்று கூடல்கள், நண்பர்களுக்கு இடையான சந்திப்புகள் போன்ற இடங்களில் அதிகமான போதைவஸ்தை தாம் பாவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்று பிரான்சில் என்றும் இல்லாதவாறு கோகோயின் பாவனையும், அதன் வியாபாரங்களும் அதிகரித்துள்ளது. நகரப்புறங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் கோக்காயின் விநியோகம் மிக வேகமாக இரகசியமாக நடந்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த உள்துறை அமைச்சர் Bruno Retailleau அவர்கள் புதிய பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்துள்ளார் அந்த பிரச்சாரத்தில் கோகோயின் பாவனை அதன் விற்பனை, ஒருவரை குற்றவாளியாக காட்டும் மனோநிலையை தோற்றுவிக்கும் வகையில் அந்த பிரச்சாரம் அமைந்துள்ளது.