Paristamil Navigation Paristamil advert login

டெஸ்ட் போட்டியில் இமாலய சாதனை படைத்த ஸ்டூவர்ட் பிராட்

டெஸ்ட் போட்டியில் இமாலய சாதனை படைத்த ஸ்டூவர்ட் பிராட்

20 ஆடி 2023 வியாழன் 08:25 | பார்வைகள் : 2346


இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார்.

மான்செஸ்டரில் இன்று இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது ஆஷஸ் டெஸ்ட் தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி அவுஸ்திரேலியா களமிறங்கியது. கவாஜாவை 3 ஓட்டங்களில் ஸ்டூவர்ட் பிராட் ஆட்டமிழக்க செய்தார்.

இது அவரது 599வது விக்கெட் ஆகும். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய லபுசாக்னே, மிட்செல் மார்ஷ் தலா 51 ஓட்டங்களும், ஸ்டீவன் ஸ்மித் 41 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

48 ஓட்டங்கள் எடுத்திருந்த டிராவிஸ் ஹெட், ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் ஜோ ரூட்டிடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் டெஸ்டில் 600 விக்கெட்டுகள் வீழ்த்திய 5வது வீரர் என்ற இமாலய சாதனையை பிராட் படைத்தார்.

மேலும், 600 விக்கெட்கள் மைல்கல்லை எட்டிய இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் பிராட் ஆவார். அவருக்கு முன்பாக 688 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆண்டர்சன் உள்ளார்.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்