Paristamil Navigation Paristamil advert login

iPhone 7 எப்போது வெளியாகும்?

iPhone 7 எப்போது வெளியாகும்?

1 புரட்டாசி 2016 வியாழன் 11:34 | பார்வைகள் : 9419


 அப்பிள் நிறுவனம் iPhone 6 கைப்பேசிகளை அறிமுகம் செய்த சில வாரங்களிலேயே iPhone 7 தொடர்பான எதிர்பார்ப்பு அதிகமாகயிருந்தது.

 
இந்நிலையில் அக் கைப்பேசிகளின் சிறப்பம்சங்கள் தொடர்ச்சியாக பல தகவல்களும் வெளிவந்த வண்ணம் இருந்தன.
 
எனினும் அப்பிள் நிறுவனம் பொதுவாக தனது ஒவ்வொரு ஐபோன்களையும் ஒவ்வொரு வருடத்தின் செப்டெம்பர் மாதத்திலேயே அறிமுகம் செய்துவருகின்றது.
 
இதன்படி iPhone 7 கைப்பேசியும் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக செப்டெம்பர் 16ம் திகதி அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் கசிந்துள்ளன.
 
மேலும் செப்டெம்பர் 7ம் திகதி அப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பில் அறிவித்தலை வெளியிடவுள்ளதுடன், 9ம் திகதி முற் பதிவுகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே செப்டெம்பர் 7ம் திகதி சன்பிரான்சிஸ்கோவில் இடம்பெறவுள்ள நிகழ்வு ஒன்றில் இக் கைப்பேசி தொடர்பான மேலதிக விபரங்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது