Paristamil Navigation Paristamil advert login

ஐபோன் 12 தொலைபேசிக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்..??

ஐபோன் 12 தொலைபேசிக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்..??

14 புரட்டாசி 2023 வியாழன் 09:32 | பார்வைகள் : 3156


பிரான்சில் iPhone 12 தொலைபேசியை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தியினை நாம் முன்னதாக வெளியிட்டிருந்தோம். 

ஏன் இந்த தடை?!

இந்த தடை குறித்த 12 மொடல் தொலைபேசிகளுக்கு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. ஒருநாட்டில் தொலைபேசிகள் விற்பனை செய்யப்படுவதற்கு SAR திறன் என அழைக்கப்படும்ஒரு அளவீடு மிக முக்கியமானதாகும். SAR திறன் (ஆங்கிலத்தில் : Specific absorption rate) என்பது குறித்த தொலைபேசி வெளியிடும் கதிரியக்க அதிர்வுகளை அளவிடும் ஒருமுறையாகும். அனேகமான நாடுகளில் இந்த SAR அளவீடானது 1.6 W/Kg எனும்வரையறைக்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்.

இந்நிலையில், குறித்த iPhone 12 தொலைபேசியானது இந்த அளவை விட அதிகளவுகதிரியக்க அளவினை வெளியிடுவதாக ANFR தெரிவித்துள்ளது. (ANFR நிறுவனமானதுஇலத்திரனியல் சாதனங்களுக்கான தேசிய அதிர்வெண்களை கண்காணிக்கும்நிறுவனமாகும் -l’Agence nationale des fréquences) 

இந்த எச்சரிக்கையை விடுத்த ANFR, இதனை ஒரு Software மேம்படுத்தலூடாக சரிசெய்யமுடியும் எனவும் அறிவுறுத்தியிருந்தது.

ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் தரப்பு இதனை ஏற்க மறுத்துள்ளது. அனைத்துநாடுகளுக்கும் பொருந்தும் விதமாகவே தங்களது தொலைபேசிகள் SAR திறன்களைகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

இதனால் தேசிய தொலைத்தொடர்பு அமைச்சர் Jean-Noël Barrot குறித்த iPhone 12 தொலைபேசிகளை பிரான்சில் விற்பனை செய்ய தடை விதித்துள்ளார். ‘செவ்வாய்க்கிழமைமுதல் பிரான்சின் iPhone 12 தொலைபேசிகள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது!’ எனதெரிவித்த அவர், ஆபத்தான அதிர்வுகளை குறித்த தொலைபேசி வெளியிடுவதாகவும்(d’émettre des ondes dangereuses.) தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்