Paristamil Navigation Paristamil advert login

தி கோட் திரைப்படத்தின் முதலாவது பாடல் வெளியானது

தி கோட் திரைப்படத்தின் முதலாவது பாடல் வெளியானது

14 சித்திரை 2024 ஞாயிறு 14:03 | பார்வைகள் : 1403


தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று சித்திரை புத்தாண்டு தினத்தில் விசில் போடு என்ற பாடல் வெளியாகும் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது.

யுவன் ஷங்கர் ராஜா கம்போஸ் செய்த இந்த பாடலை விஜய் பாடி இருப்பதாகவும் இந்த பாடலை மதன் கார்க்கி எழுதி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்றுமுன் இந்த பாடல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலை முதல் வரியே ’பார்ட்டி ஒன்று தொடங்கட்டுமா, அதிரடி கலகட்டுமா, கேம்பேனே தான் தொறக்கட்டுமா, மைக்கை கையில் எடுக்கட்டுமா’ என்று மறைமுக அரசியல் கருத்துக்கள் உள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா முதல் பாடலையே செம ஆட்டம் போடும் வைக்கும் பாடலாக கம்போஸ் செய்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த பாடல் வெளியாகி ஒரு சில நிமிடங்களை ஆகி உள்ள நிலையில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்து விட்டதை அடுத்து இந்த பாடல் வீடியோ பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்