Paristamil Navigation Paristamil advert login

அஜித்துடன் கூட்டணி சேரும் தனுஷ்..?

அஜித்துடன் கூட்டணி சேரும் தனுஷ்..?

21 ஆவணி 2023 திங்கள் 09:49 | பார்வைகள் : 2558


லோகேஷ்  அடுத்ததாக  யாரை வைத்து படத்தை இயக்கப் போகிறார் என்று பல கேள்விகளை எழுப்பிகிறது. ஆனாலும் இவர் கதையில் எப்படியாவது நடித்த ஆக வேண்டும் என்று இந்தியாவில் இருக்கும் முக்கிய நடிகர்கள் அனைவரும் லோகேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

ஆனால் இதுவரை லோகேஷ் யாருக்கும் சரியான பதிலை சொல்லாமல் மௌனமாக இருக்கிறார். அந்த வகையில் ரசிகர்கள் யூகித்து வைத்தது லோகேஷின் அடுத்த படம் ரோலக்ஸ் அல்லது கைதி 2 இருக்கலாம் என்று. இதற்கிடையில் தனுஷை வைத்து ஒரு படத்தை பண்ண வேண்டும் என்று ஆசை லோகேஷ்க்கு இருக்கிறது.
 

அத்துடன் இப்படத்தை தனுஷை மட்டும் வைத்து இயக்கினால் போதாது என்று நினைத்து அஜித்தையும் இதில் நடிக்க வைத்து விட வேண்டும் என்ற புது யோசனையாக சிந்தித்து வருகிறார். ஒருவேளை இவர்கள் கூட்டணி உறுதியாகிவிட்டால் கண்டிப்பாக லியோ மற்றும் ஜெயிலர் படத்தின் வசூலை விட இரட்டிப்பாகும் என்பது நிச்சயம்.

ஆனால் இது எப்படியும் தொடங்குவதற்கு தற்போது அஜித் நடிக்கும் விடாமுயற்சி படம் முடிய வேண்டும், அதே நேரத்தில் தனுஷின் 50 வது படத்தையும் முடித்த பிறகு தான் இந்த பிரம்மாண்ட கூட்டணி ஆரம்பமாகும். இந்த இடைப்பட்ட காலத்தில் லோகேஷ் இன்னொரு படத்தை எடுத்து முடிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
 

அடுத்தபடியாக லியோ மற்றும் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்திருக்கும் ஜெயிலர் படத்தின் வசூல்கள் அனைத்தையும் தாண்டி எதிர்பார்க்காத வெற்றியை இப்படம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாதிரியான வித்தியாசமான யோசனையும், கதையையும் லோகேசால் மட்டும் தான் எடுக்க முடியும்.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்