Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைப்பு!

இலங்கையில் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைப்பு!

22 வைகாசி 2024 புதன் 16:24 | பார்வைகள் : 988


லங்கா சதொச நிறுவனம் இன்று (22) முதல் அமுலாகும் வகையில் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது. 

 
இதன்படி ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 950 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் இந்தியப் பெரிய வெங்காயத்தின் விலை 250 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 
 
அத்துடன் லங்கா சதொச ஊடாக ஒரு கிலோகிராம் கொண்டைக் கடலை 450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 
 
அதேநேரம் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்