சுவிட்சர்லாந்தில் 37 ஆண்டுகள் பனியில் உறைந்த மனித உடல்...
3 ஆவணி 2023 வியாழன் 05:17 | பார்வைகள் : 4442
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸில் உள்ள மேட்டர்ஹார்ன் அருகே உள்ள பனிப்பாறையில் 37 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலையேறுபவரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரை கடந்து சென்ற மலையேற்ற வீரர்கள் குழுவால் இது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
கண்டுப்பிடிக்கப்பட்ட உடற்பாகங்கள் DNA பரிசோதனைக்காக சியோனில் உள்ள வலாய்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சுமார் 1986 ஆம் ஆண்டுகளில் மலையேறி காணமல் போன 38 வயதுடையவரின் உடற்பாகங்கள் என்பதை பரிசோதனை உறுதிசெய்துள்ளது.
மேலும் காணாமல் போனவரின் ஹைகிங் பூட் மற்றும் மலையேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் உலோக கொக்கிகள் ஆகியவற்றின் புகைப்படங்களை வெளியாகியுள்ளது எனலாம்.
ஏறுபவர்களின் அடையாளம் அல்லது இறப்புக்கான காரணம் பற்றிய தகவல்களை காவல்துறை வழங்கவில்லை.
பனிப்பாறைகள் குறைந்து வருவதால், பல தசாப்தங்களுக்கு முன் காணாமல் போன மலையேறுபவர்களை கண்டுபிடித்துள்ளதமாக சுவிஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.