கமல் ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு விருந்து..!
14 சித்திரை 2024 ஞாயிறு 11:06 | பார்வைகள் : 1848
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 14 அன்று ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இன்று தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ’இந்தியன் 2’ படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் மாஸ் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்தியன் தாத்தாவின் இரண்டு விதமான கெட்டப்புகள் இந்த போஸ்டரில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஏராளமான கமெண்ட்ஸ் கலை பதிவு செய்து வருகின்றனர்
மேலும் ஜூன் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் குறிப்பாக டீசர், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா ஆகியவற்றை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.