கமல் மகள் ரஜினிக்கு மகளாக நடிக்கிறாரா ?
14 சித்திரை 2024 ஞாயிறு 10:57 | பார்வைகள் : 1897
உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ரஜினியின் அடுத்த படத்தில் அவருக்கு மகளாக நடிக்க இருப்பதாக கூறப்படுவது கோலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி, கமல் ஆகிய இருவரும் இணைந்து நடிக்காத நிலையில் அவர்களின் வாரிசுகள் இணைந்த திரைப்படம் வெளியானது என்பதும் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கமல் மகள் ஸ்ருதிஹாசன் நாயகி ஆக நடித்த ’3’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 171’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து 'இனிமேல்’ என்ற ஆல்பத்தில் பணிபுரிந்த நிலையில் தற்போது மீண்டும் லோகேஷ் படத்தில் ஸ்ருதிஹாசன் பணிபுரிய உள்ளது கோலிவுட் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த் மகள் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வரும் 22ஆம் தேதி ’தலைவர் 171’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாக இருக்கும் நிலையில் அதில் ஸ்ருதிஹாசன் நடிப்பது உறுதி செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.