Paristamil Navigation Paristamil advert login

400 ஆண்டுகால கலாச்சார பாரம்பரியம் தீப்பிடிப்பு 

400 ஆண்டுகால கலாச்சார பாரம்பரியம் தீப்பிடிப்பு 

17 சித்திரை 2024 புதன் 07:29 | பார்வைகள் : 2612


டென்மார்க்கில் 400 ஆண்டுகால டென்மார்க் கலாச்சார பாரம்பரியம் தீப்பிடித்து எரிந்துள்ளதாக அந்நாட்டு கலாச்சார அமைச்சர் ஜாகோப் ஏங்கல்-ஷ்மிட் தெரிவித்துள்ளார்.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனின் மத்தியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய பங்குச் சந்தை கட்டிடம் செவ்வாய்கிழமை 16 ஆம் திகதி காலை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த கட்டிடம் 17 ஆம் நூற்றாண்டின் போர்சன் நகரின் பழமையான கட்டிடங்களில் ஒன்றாகும். 

இது “தி ஃபோல்கெட்டிங்" எனப்படும் டென்மார்க்கின் பாராளுமன்றம் மற்றும் கிறிஸ்டியன்ஸ்போர்க் அரண்மனை ஆகியவற்றிலிருந்து குறுகிய தூரத்திலுள்ள 1625 ஆம் ஆண்டுக்கு முந்தைய கட்டிடமாகும்.

இந்த பங்குச் சந்தை கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு பாதுகாப்பிற்காக பிளாஸ்டிக் உறைகளால் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தற்போது டென்டமார்க் வர்த்தக சபையைக் கொண்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் உள்ளூர் கைவினை கலைஞர் ஹென்ரிக் கிரேஜ், “இது ஒரு சோகமான நாள். 

இது எங்கள் நோட்ரே-டேம்“ என 2019 ஆம் ஆண்டு பாரிஸில் உள்ள நோட்ரே டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்துடன் ஒப்பிட்டு கூறியுள்ளார்.

நாற்பது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதேசமயம் அவசரகால சேவைகளுடன் கட்டத்தை கடந்து சென்ற குடியிப்பாளர்கள் மற்றும் டென்மார்க் வர்த்தக சபையின் பணிப்பாளரான பிரையன் மிக்கெல்செனிலும் இணைந்து கலைப் பொக்கிஷங்களை பாதுகாத்துள்ளனர்.

ஸ்லாட்ஷோல்மென் தீவிலுள்ள இந்த டச்சு மறுமலர்ச்சி கால கட்டிடம் கோபன்ஹேகனை ஒரு பெரிய வர்த்தக மையமாக மாற்றும் நோக்கத்துடன் டென்மார்க்கின் ஐந்தாம் கிறிஸ்டியன் மன்னனால் நிர்மாணிக்கப்பட்டது.

பங்குச் சந்தை கட்டிடத்தில் தீயில் கருகி சரிந்து வீழ்ந்த கோபுரத்தில் செங்குத்தாக முறுக்கப்பட்ட நான்கு டிராகன்களின் வால்கள் மற்றும் மூன்று கிரீடங்கள் அண்டைய நாடான நோர்வே மற்றும் ஸ்வீடனுடனான நெருங்கிய உறவைக் குறிப்பதாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்